Connect with us

 பல வருடங்களுக்கு பிறகு திரையில் ஜொலிக்க உள்ள ‘துருவ நட்சத்திரம்’… படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா…?

CINEMA

 பல வருடங்களுக்கு பிறகு திரையில் ஜொலிக்க உள்ள ‘துருவ நட்சத்திரம்’… படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா…?

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ என இரண்டு படங்கள் ரிலீசுக்கு  காத்திருக்கிறது. இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

   

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள் மற்றும் 2 பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. சில ஆண்டுகளாக வெளிவராமல் இருக்கும் இந்தப் படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் படக்குழு நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். தீபாவளிக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 24ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்பொழுது திரையிடப்பட உள்ளது.  இதோ அந்த  அதிகாரபூர்வ அறிவிப்பு…

Continue Reading
To Top