ஐயோ பாவம்… கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த… 3 தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கி பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 10, 2026

Spread the love

ஒடிசாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியின் போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக 3 தொழிலாளர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி தொட்டிக்குள் இறங்கியதால், அங்கு தேங்கியிருந்த நச்சு வாயுவை சுவாசித்து அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீட்பதற்காக உடனடியாக தீயணைப்பு படை வீரர்களும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தீவிர போராட்டத்திற்குப் பிறகு, உடல்களை தொட்டியிலிருந்து வெளியே எடுத்து பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

   

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போதிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மனிதக் கழிவுகளை கையால் அள்ளும் தடைச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.