திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த 69 வயது சுப்புலட்சுமியின் வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணின் 25 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். சுப்புலட்சுமியின் உறவினரான சிவகலா (51), மனநலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை வயலூர் முருகன் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, பாலக்கரையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் சிவலோகேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது தாயாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவருடைய தாயார் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாலசுப்ரமணியம் மற்றும் இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சுப்புலட்சுமி, சிவகலா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
