‘காதல் மன்னன்’ தொடங்கி 3 படங்கள்.. ரீ ரிலிஸ்க்கு தயார்.. அஜித் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் செம ட்ரீட்..!

By Mahalakshmi on சித்திரை 27, 2024

Spread the love

பொதுவாக சினிமாவில் ஒரு சில பிரபலங்களின் திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தால் அந்த திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வது வழக்கம்தான். எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை பல நடிகர்களின் திரைப்படங்கள் ரீலீஸ் செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்தில் விஜயின் கில்லி திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு யாரும் எதிர்பாராத வகையில் 17 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கின்றது.

   

இப்படம் வெளியான பின்பு வெளியான ரத்தினம் திரைப்படம் கூட அந்த அளவு வரவேற்பு பெறவில்லை. கில்லி படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இதற்கு இடையில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்வது குறித்து தொடர் ஆலோசனையில் இருக்கிறார்கள்.

   

 

அந்த வகையில் அஜித்தின் பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி அவரது நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த காதல் மன்னன், பில்லா, மங்காத்தா ஆகிய மூன்று திரைப்படங்களும் வெளியாக போகின்றது. கில்லி படத்தை போல இந்த படங்களும் வசூலை அள்ளும் என அப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள். அஜித்தின் 3 படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் இது அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும் என்று கூறி வருகிறார்கள்.