கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாறா பகுதியில், பக்கத்து வீட்டுப் பகையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரைக் கொடூரமாகக் கொலை செய்த செந்தாமரை (61) என்ற குற்றவாளியின் திமிர் பேச்சு நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சஜிதா என்ற பெண்ணைக் கொலை செய்துவிட்டு ஜாமீனில் வெளிவந்த செந்தாமரை, தனது பகையை விடாமல் கடந்த 2025 ஜனவரி 27 அன்று சஜிதாவின் கணவர் சுதாகரன் மற்றும் அவரது 75 வயது தாய் லட்சுமி ஆகியோரையும் கொடூரமாக இரட்டைக் கொலை செய்தார். இந்த வழக்கில் அவர் மட்டுமே குற்றவாளி என்று பாலக்காடு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கென்னத் ஜார்ஜ் நேற்று தீர்ப்பளித்தார். இதனிடையே, “இது கடுமையான வழக்கு என்பதால் உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது; ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?” என்று நீதிபதி கேட்டதற்கு, “என்னைத் தூக்கிலிடுங்கள்; நான் ஒன்றும் காந்தி அல்ல” என்று செந்தாமரை நீதிமன்றத்திலேயே திமிராகப் பதிலளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (ஜூலை 15) அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாரிசுகளான அதுல்யா மற்றும் அகிலா ஆகிய இளம் பெண்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். “நீதிமன்றத்திலேயே மிரட்டல் விடுக்கும் செந்தாமரையைக் கண்டு எங்களுக்குப் பயமாக இருக்கிறது; அப்பா, அம்மா, பாட்டி என மூவரையும் இழந்து தவிக்கும் எங்களை, அவன் வெளியில் வந்தால் கண்டிப்பாகக் கொன்றுவிடுவான்” என்று அவர்கள் கதறியுள்ளனர். தனது குடும்பத்தினர் பிரிந்து சென்றதற்கு பக்கத்து வீட்டினரே காரணம் எனத் தவறாகக் கணித்து, கண்மூடித்தனமான பகையால் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை அழித்த இந்தக் கொடூரக் குற்றவாளிக்கு, சட்டத்தின்படி தகுந்த உச்சகட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…