சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்காக முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆஜரானார். முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரிடம் தகராறில் ஈடுபட்டதாகச் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல் துறை அவருக்குச் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் தற்போது நேரில் சென்று தனது விளக்கத்தை அளித்துள்ளார். இதே விவகாரம் தொடர்பாகத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
