BREAKING: பிரதமர் மோடியை கொல்வேன்?… பெரும் பரபரப்பு… சற்றுமுன் நாடே அதிர்ச்சி…!

By Rajeshwari on பங்குனி 24, 2026

Spread the love

பிரதமர் நரேந்திர மோடிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை வெடிகுண்டு வீசி கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பாக, டெல்லி முதல்வர் ரேகா குப்தாவின் பெயரும் அந்த மிரட்டல் கடிதத்தில் இடம்பெற்றுள்ளது பாதுகாப்பு வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

   

இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக டெல்லி போலீசார் மற்றும் பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதன் பின்னணியில் உள்ள நபர் யார் என்பதை கண்டறிய சைபர் கிரைம் நிபுணர்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

   

இந்நிலையில் ஆரம்பகட்ட விசாரணையில், மின்னஞ்சல் முகவரியின் நம்பகத்தன்மை மற்றும் அதன் ஐபி முகவரி  ஆகியவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் வெறும் புரளியா அல்லது திட்டமிட்ட சதி செயலா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.