மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலில் இரண்டு முறைக்கு மேல் நீட் தேர்வு எழுதிய 48 ஆயிரத்து 952 மாணவர்களுக்கு கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் முறை எழுதியவர்கள் 23,240 பேரும், இரண்டு முறை எழுதியவர்கள் 27,825 பேரும், மூன்று முறை எழுதியவர்கள் 14,636 பேரும், நான்கு முறை எழுதியவர்கள் 4215 பேரும், ஐந்து முறைக்கு மேல் எழுதியவர்கள் 573 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள்.
