உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜயநகர் பகுதியில் அமைந்த 3 மாடி வீடொன்றில், வீட்டின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த சமயம் பார்த்து மர்ம நபர் ஒருவன் திருடப் புகுந்துள்ளான்.
3வது மாடியில் இருந்த உடைந்த கிரில் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் நுழைந்த அந்த திருடன், பயமே இல்லாமல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டின் மூன்று மாடிகளிலும் உள்ள அனைத்து பீரோக்கள், சேஃப்ட்டி லாக்கர்கள் என அனைத்தையும் ஜல்லடை போட்டுத் தேடி, அங்கிருந்த ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகளைச் சுருட்டியுள்ளான்.
குடும்பத்தினர் மயக்க ஸ்ப்ரே அடித்துக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில், திருடன் கொள்ளையடித்த பொருட்களுடன் பையைத் தூக்கிக்கொண்டு ஓடும் பகீர் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இக்காட்சிகளைக் கைப்பற்றிய காசியாபாத் போலிஸார், வழக்குப் பதிவு செய்து தலைமறைவான திருடனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
