“திமுகவில் இருந்து விலகல்”…. விஜய்யின் தவெகவில் இணையும் தோப்பு வெங்கடாசலம்?…. சற்றுமுன் அரசியலில் பெரும் பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 31, 2026

Spread the love

திமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகக் வெளியாகும் தகவல்கள் ஈரோடு மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்திற்கும் இடையே நீண்ட நாட்களாகவே உள் அரசியல் மோதலும் பனிப்போரும் நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, தோப்பு வெங்கடாசலம் தவெகவில் இணைய மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவரிடமிருந்த திமுக மாவட்டப் பொறுப்பாளர் பதவி பறிக்கப்பட்டது.

மாவட்ட அளவில் நிலவிய உட்கட்சிப் பூசல் மற்றும் அதிகாரப் போட்டியே தோப்பு வெங்கடாசலம் திமுகவில் இருந்து விலகுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தன் ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வந்த அவர், தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சரான இவரது வரவு, கொங்கு மண்டலத்தில் தவெகவின் அமைப்பை வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், ஈரோடு திமுக வட்டாரத்தில் இந்த நகர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.