“திமுக கூடாரமாக மாறும் தவெக?”…. லைவ் வீடியோவில் விஷம் குடித்த தவெக நிர்வாகி… முதல்வர் விஜய்க்கு அடுத்தடுத்த அதிர்ச்சி…!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் உட்கட்சிப் பூசல் காரணமாக, ஒன்றிய இளைஞரணி நிர்வாகி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் நீண்டகாலமாகப் பணியாற்றியவர்களைப் புறக்கணித்துவிட்டு, மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ வெளியிட்ட பின்னரே அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட தவெக நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, புதியவர்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த குழந்தை ராஜா நீக்கப்பட்டு, திமுகவிலிருந்து புதிதாக இணைந்த பாரத் என்பவர் அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்த பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தை ராஜாவின் ஆதரவாளரும் தவெக ஒன்றிய இளைஞரணிச் செயலாளருமான முத்துக்குமரன் விஷம் அருந்தி, அதை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

   

வைரலாகி வரும் அந்த வீடியோவில் பேசியுள்ள முத்துக்குமரன், “கடந்த 2000-ம் ஆண்டு முதல் 26 ஆண்டுகளாக உங்களின் தீவிர ரசிகனாகப் பயணித்து வருகிறேன். கட்சி தொடங்கியபோதும் தீவிரமாகப் பணியாற்றினேன். ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி தவெகவில் நடக்கும் குளறுபடிகளால் உங்களின் பெயர் தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை மின்னஞ்சல் அனுப்பியும், நேரில் சந்திக்க முயன்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுகவிலிருந்து வந்தவர்களுக்கே முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதால் கட்சி திமுக கூடாரமாக மாறி வருவதாகவும், விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே நிர்வாகிகள் செயல்படுவதாகவும் அதில் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே விஷம் அருந்திய முத்துக்குமரன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.