விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தொடங்கி 50 நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஐந்து பேர் எலிமினேட் ஆகியுள்ளார்கள் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். அனதன்பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் சுனிதா, ஆர்னவ், ரியா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. இதில் ஆண்கள் அணியில் இருந்து ராஜாவாக ராணவ்ம், பெண்கள் அணியிலிருந்து சாச்சனா ராணியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடந்த டாஸ்க்கின் அடிப்படையில் யார் அதிக முறை வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு அரியணை வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதனை அடுத்து கிடைக்கும் டாஸ்க்கில் எல்லாம் சூப்பராக விளையாடிய ஆண்கள் அணியினர் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று அரியணையை கைப்பற்றினர். பெண்கள் அணியினரால் ஒரே ஒரு போட்டியில் தான் வெற்றியில் பெற முடிந்தது.
இதனால் அரியணை ஏறும் வாய்ப்பை தவறவிட்டார் சாச்சனா. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் மொத்தம் 13 போட்டியாளர்கள் உள்ளார்கள். இதில் சௌந்தர்யா, முத்துக்குமரன் அதிகமான வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக விஷால், ராணவ், ஜாக்லின், அருண் பிரசாத், பவித்ரா, ரயான், தர்ஷிகா ஆகியோரும் கணிசமான வாக்குகளை பெற்றார்கள்.
கம்மியான வாக்குகளை பெற்று கடைசி டேஞ்சர் இடத்தில் இருக்கும் போட்டியாளர்கள் வர்ஷினி வெங்கட், ஆனந்தி, சாச்சனா மற்றும் சிவக்குமார் தான். இந்த நான்கு பேர் தான். இதில் சிவகுமாருக்கு தான் மிக கம்மியான வாக்குகள் கிடைத்துள்ளது. ஆனால் அவரை ஆண்கள் அணியினர் நாமினேஷன் பாஸ் கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இதனால் தப்பித்து விட்டார் இதனால் ஆனந்தி வர்ஷினி சாச்சனா ஆகிய மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் எலிமினேட் என்ற கூறப்பட்ட நிலையில் தற்போது வர்ஷினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.