சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து 8 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது காவல்துறையினருக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் உண்மை வெளிச்சத்திற்கு வந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் உலுக்கியுள்ளது.
இந்தத் தொடர் மரணங்களின் பின்னணியில் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் ராம் சகாய் ஜெய்ஸ்வால் (47) என்பவர் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தன்னை கேலி செய்தவர்கள் மற்றும் தன்னிடம் கடன் வாங்கிவிட்டு திருப்பிக் கொடுக்காதவர்களை பழிவாங்க அவர் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார். தினமும் மாலையில் அவர்களை மது அருந்தலாம் என ஆசையாக அழைத்துச் சென்று, யாருக்கும் தெரியாமல் மதுவில் எலி மருந்தை (விஷம்) கலந்து கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடல்நலம் குன்றி உயிரிழந்த நிலையில், கொலையாளி யார் என்பதை யாராலும் கணிக்க முடியாமல் போயுள்ளது.
தன்னைக் காவல்துறையினர் நெருங்கிவிடக் கூடாது என்பதற்காக ராம் சகாய் மிகவும் சாதுரியமாகச் செயல்பட்டுள்ளார். விஷம் குடித்தவர்கள் நோய்வாய்ப்பட்டபோது, அவர்களைத் தானே முன்னின்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, அவர்கள் இறந்த பிறகு நடந்த இறுதிச்சடங்குகளிலும் கலந்துகொண்டு குடும்பத்தினருடன் சேர்ந்து துக்கம் அனுசரித்து நாடகமாடியுள்ளார். எனினும், உயிரிழப்பதற்கு முன்பு கடைசியாக அவருடன் மது அருந்தியவர்கள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் அவரைத் தூக்கினர். ‘ஸ்பைடர்’ திரைப்பட பாணியில், சைக்கோ தனத்துடன் நடத்தப்பட்ட இந்தத் கொடூரத் தொடர் கொலைச் சம்பவம் அந்த மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் தலை நகரான சென்னையில், பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டி வரும் வாலிபர் ஒருவரை இளம் பெண் ஒருவர்…
மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக, மருத்துவக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தெய்வத்தின் அவதாரமாகச் சித்தரிக்கும் விநோதமான செயல்கள் நம் சமூகத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்ணை…
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…
ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதிக்குட்பட்ட குஷால்நகரில், கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை 4:30 மணியளவில் பயங்கர தாக்குதல்…