“இதென்னப்பா புது வம்பா இருக்கு…? WWE வீரர்களுக்கே சவால் விடும் எலிகளின் ‘கிக் பாக்ஸிங்’ சண்டை… விழுந்து விழுந்து சிரிக்கும் நெட்டிசன்கள்…!!”

Spread the love

இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் பல சுவாரசியமான வீடியோக்கள் வெளியாகி நம்மை சிரிக்க வைக்கின்றன. அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் இரண்டு எலிகளுக்கு இடையே நடக்கும் ஒரு பயங்கரமான சண்டை வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் உள்ள இரண்டு எலிகளும் சாதாரண சண்டை போடாமல், ஏதோ பெரிய டபிள்யூ.டபிள்யூ.இ மல்யுத்த வீரர்கள் மோதிக் கொள்வதைப் போல மிக ஆக்ரோஷமாக சண்டையிடுகின்றன. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் தங்களின் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வீடியோவை ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோவின் தொடக்கத்தில் இரண்டு எலிகளும் மிகவும் அமைதியாக, யார் முதலில் தாக்குவது என்று ஒன்றையொன்று பார்த்தபடி நிற்கின்றன. ஆனால் அடுத்த கணமே, நிலைமை தலைகீழாக மாறுகிறது. ஒரு எலி திடீரென காற்றில் குதித்து மற்றொன்றைத் தாக்குகிறது. அதன்பின், இரண்டு எலிகளும் தங்களது பின்னங்கால்களில் எழுந்து நின்று, காற்றில் குதித்துக் குதித்து கிக் பாக்ஸிங் செய்வது போல பரஸ்பரம் கிக் மற்றும் பஞ்களை வாரி இறைக்கின்றன. ஏதோ ஒரு பிரத்யேக அக்காடமியில் பயிற்சி பெற்றது போல, அவை ஒன்றையொன்று மாற்றி மாற்றி தாக்கும் விதம் அப்படியே நிஜமான WWE போட்டியை நமக்கு நினைவூட்டுகிறது.

https://www.instagram.com/reel/DXaAH3KExqq/?utm_source=ig_web_button_share_sheet

இந்த எலிகளின் சண்டையை விட, அந்த வீடியோவில் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ள ஆடியோ தான் அதனை மேலும் சுவாரசியமாக்குகிறது. எலிகள் மோதிக்கொள்ளும் போது, பின்னணியில் நிஜமான WWE போட்டியின் வர்ணனை மிக உற்சாகமான குரலில் ஒலிக்கிறது. இன்ஸ்டாகிராமில் கணக்கில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 4 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர், மேலும் தொடர்ந்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு லைக்குகளைக் குவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

ஐயோ காப்பாத்துங்க… KSRTC பேருந்து சக்கரத்தில் சிக்கி… அலறிய பள்ளி மாணவர்… திருவம்பாடியில் நடுங்க வைக்கும் விபத்து…!

திருவம்பாடி பேருந்து நிலையத்திற்குள் வியாழக்கிழமை நுழைந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மோதியதில், பிளஸ் ஒன் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்தின்…

6 minutes ago

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

15 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

34 minutes ago

“சொத்து பத்திரம் இனிமேல் பேப்பரில் இல்ல… நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக்கில் மக்கள்….!

தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு…

48 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்”…. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை…. மீன் குழம்பில் விஷம்….. மகள் செய்த உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை…

58 minutes ago

“என் அக்காவுக்கு வளைச்சு விடு.. இல்லனா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்”…. தங்கைக்கு  கொலை மிரட்டல்… இளைஞர் செய்த பதற வைக்கும் சம்பவம்….!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது இளைஞர்கள் சிலர் ஒருதலைபட்சமாகக்…

1 மணத்தியாலம் ago