#image_title
நடனப்புயல் என்றாலே பிரபுதேவா தான். அவரின் பெயரை கூறினால் நமக்கு நினைவுக்கு வரும் பண்பானவர், எளிமையானவர், சோர்வாக இருப்பவர்கள் கூட இவரது நடனத்தை பார்த்தால் உற்சாகமாகி விடுவார்கள். நடனம் மட்டும் இல்லாமல் நடிப்பு, இயக்கம் என பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குபவர் பிரபுதேவா மாஸ்டர், தமிழ் சினிமாவில் குரூப் டான்சராக தன் வாழ்க்கையை தொடங்கிய பிரபுதேவா பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே தலையை காட்ட ஆரம்பித்தார்.
பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 90களில் ஒரு முன்னணி ஹீரோவாக நடித்து வந்த பிரபுதேவா தனது நடனத்தால் இந்தியாவின் மைக்கேல் மைக்கேல் ஜாக்சனாக மாறினார். அவர் மட்டும் இல்லாமல் அவருடைய சகோதரர்களான ராஜூ மாஸ்டர், நாகேந்திர பிரசாத் போன்றவர்களும் ஒரு நல்ல நடன கலைஞர்கள்.
தமிழ் தொடங்கி தற்போது ஹிந்தி வரை பல திரைப்படங்களில் நடித்து அசதி வருகிறார் நடிகர் பிரபுதேவா. இவர் சிறப்பாக நடனமாடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இப்படி ஆடுவதற்கு காரணம் அவரது தந்தை சுந்தரம் மாஸ்டர் தான் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை.
பிரபு தேவா இந்த அளவிற்கு நடன புயலாக மாறியதற்கு அவரது தந்தையின் நண்பரான தர்மராஜ் மாஸ்டர் தான் முக்கிய காரணம். சுந்தரம் மாஸ்டரும் தர்மராஜ் மாஸ்டரும் மிகச் சிறந்த நண்பர்கள். இதனால் தன்னிடம் நடனம் கற்றுக் கொள்வதை காட்டிலும் தனது நண்பனிடம் கற்றுக் கொண்டால் தனது மகன்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய சுந்தரம் மாஸ்டர் தர்மராஜ் மாஸ்டரிடம் தான் பிரபுதேவாவை நடனம் கற்றுக் கொள்ள அனுப்பி இருக்கின்றார்.
அவரிடம் இருந்து வந்த இந்த ஆற்றல் தான் பிரபுதேவா சிறப்பாக நடனம் ஆடுவதற்கு காரணம் என அவரை பல பேட்டியில் கூறியிருக்கின்றார். முதன் முதலாக மின்சார கனவு படத்தில் தேசிய விருது வாங்கிய பிரபுதேவா முதன்முதலாக அவரது குருவான தர்மராஜ் மாஸ்டர் இடம்தான் போய் காட்டினாராம். அவர் தொழில் பயபக்தியோடு இருக்க வேண்டும் என்று ஆசிர்வாதம் செய்தாராம்.
இன்று வரை தமிழில் நடன புயலாக இருக்கும் பிரபுதேவா தமிழில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கி வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இருந்து வெளியான பாடலில் கூட தனது நடனத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார் பிரபு தேவா.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…