CINEMA
பவதாரிணி இறந்த அன்று நடந்தது இதுதான்… மனம்திறந்த வெங்கட்பிரபு…
தமிழ் சினிமாவின் மூத்த பிரபல இயக்குனரான கங்கை அமரன் அவர்களின் மகன் தான் வெங்கட் பிரபு. இவரின் பெரியப்பா இசைஞானி இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் வெங்கட் பிரபு.
தொடர்ந்து சரோஜா, மங்காத்தா போன்ற பல கமர்சியல் வெற்றி படங்களை இயக்கி புகழ்பெற்றவர் வெங்கட் பிரபு. தற்போது அவர் பிரம்மாண்டமாக விஜயை வைத்து உருவாக்கி இருக்கும் கோட் திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இளையராஜா அவர்களின் இரண்டாவது மகளான பவதாரினி இறந்த அன்று என்ன நடந்தது என்பதை பற்றி ஒரு நேர்காணலில் மனம் திறந்து பேசி இருக்கிறார் வெங்கட் பிரபு.
அவர் கூறியது என்னவென்றால் பவதாரணிக்கு கேன்சர்னு தெரிய வந்தபோவே எங்க குடும்பமே நிலைகுலைஞ்சு போயிட்டோம். அவளுக்கு எந்த சிம்டம்ஸ் எதுவுமே தெரியல. அவளுக்கு கேன்சர்ன்னு தெரிய வரப்பவே போர்த் ஸ்டேஜ்ல அவர் இருந்தா. இருந்தாலும் நாங்க குடும்பத்துல எல்லாருமே அவகிட்ட எதுவுமே சொல்ல கூடாதுன்னு சும்மா ஜஸ்ட் ஒரு செக்கப் அப்படி இப்படின்னு சொல்லி தான் அவளுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருந்தோம். அதுக்கு பிறகு அடுத்த ஸ்டேஜ்ல லைட்டா கேன்சர் செல் மாதிரி இருக்கு அதை ட்ரீட்மென்ட்ல ரிமூவ் பண்ணியாச்சுன்னா ஒண்ணுமே கிடையாது அப்படின்னு அவளுக்கு தெரியாமலே தான் ட்ரீட்மென்ட் போயிட்டு இருந்தது.
அவளுக்கு அடுத்த கட்டமா ட்ரீட்மென்ட் கொடுக்கணும் தான் ஸ்ரீலங்கால ஏற்பாடு பண்ணி இருந்தோம். யுவன் தான் ட்ரீட்மென்ட் ஏற்பாடு எல்லாம் பண்ணி இருந்தான். அங்க போனா கொஞ்சம் சரியாகும் அப்படின்னு நினைச்சோம். ஆனா அங்க போனதுக்கு அப்புறம் பவதாவுக்கு அங்கு உள்ள சிட்டுவேஷன்ஸ் எதுவுமே பிடிக்கல கம்பர்ட்டபிலா இல்ல நான் இங்க இருக்கல பிரபு நான் சென்னைக்கே வந்துடறேன் அங்க வந்து ட்ரீட்மென்ட் பார்த்துக்கலாம் அப்படின்னு என்கிட்ட சொன்னா. நான் தான் அவளுக்கு சென்னைக்கு எல்லாம் டிக்கெட் எல்லாம் அரேஞ்ச் பண்ணிட்டேன். அவள் சாகறதுக்கு முந்தின நாள் வரைக்கும் என்கிட்ட பேசிட்டு இருந்தா. நான் அவளுக்கு டிக்கெட் எல்லாம் அரேஞ்ச் பண்ணி எல்லாம் கொடுத்து அவகிட்ட நான் சொன்னேன் பேசுனேன். அந்த நேரத்துல இளையராஜா அப்பாவோட கச்சேரி அங்க ஸ்ரீலங்கால இருந்தது. அப்போ பவதா சொன்னா நான் அப்பாவை பார்த்துவிட்டு நான் சென்னைக்கு வரேன் அப்படின்னு என்கிட்ட சொல்லி இருந்தா.
அவளுக்கு கேன்சர்னு தெரிஞ்ச பிறகு அவளை எந்த அளவுக்கு சந்தோசமா வச்சுக்கணும்னு அந்த அளவுக்கு நாங்க குடும்பத்துல எல்லாருமே வச்சுக்கிட்டோம். லாஸ்ட் இயர் நியூ இயர் கூட அவளுக்காக தான் நாங்க கசின்ஸ் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து நல்லா செலிபரேட் பண்ணோம். நான் அவகிட்ட சொன்னேன் பவதா நீ சீக்கிரமா ரெடி ஆயிட்டு வா கோட் படத்துல நீ ஒரு பாட்டு பாடணும் அப்படின்னு நான் அவகிட்ட சொன்னேன். கண்டிப்பா நான் சீக்கிரமா வந்துருவேன் டா ஆனா நீ தான் என்ன கூப்பிடுற அவன் என்ன கூப்பிடவே மாட்டேன்கிறான் அப்படின்னு யுவன சொல்லி கலாய்ச்சிட்டு இருந்தா. அப்புறம் ஸ்ரீலங்காவுல இருந்து அவ கிளம்பதுக்கெல்லாம் ரெடி பண்ணி கொடுத்துட்டு கோட் படத்துக்கு பாட்டு கம்போசிங்காக நானும் யுவனும் பெங்களூரில் ஸ்டுடியோக்கு வந்து இருந்தோம்.
அங்க ஸ்டுடியோல வந்து கம்போசிங் பண்ணிட்டு இருக்கும்போது தான் எனக்கு போன் வருது பவதா இறந்துட்டான்னு. எனக்கு என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல. முந்தின நாள் வரைக்கும் என்கிட்ட நல்லா பேசிட்டு இருந்த பொண்ணு எப்படி இறந்தானு எனக்கு அந்த நிமிஷம் எதுமே ஓடல. உள்ள வேற யுவன் கம்போஸ் பண்ணிட்டு இருக்கான். அவன் கிட்ட போய் எப்படி சொல்றதுன்னு தயங்கி போய் சொன்னேன். அந்த நிமிஷமே யுவன் உடைந்துவிட்டான்.
உடனே அங்க இருந்து நாங்க பெங்களூர்ல பிளைட் புடிச்சு நேரா ஸ்ரீலங்காவுக்கு போயிட்டோம். கரெக்டா அப்போ வந்து ஜனவரி 26 ரிபப்ளிக் டே இந்தியாவுல நார்மலா வெளிநாட்டுல யாராவது இறந்துட்டாங்கனா அவங்கள நம்ம நாட்டுக்கு கொண்டு வரும்போது அது ரொம்ப பெரிய ப்ராசஸ் அது. அன்னைக்கு கவர்ன்மென்ட் ஹாலிடே அது இதுன்னு எம்பஸி எதுவுமே கிடைக்கல. ஃபுல் நைட் அன்னைக்கு தூங்காம எல்லா பிராசஸுக்கும் ரெடி பண்ணிட்டு அந்த அளவுக்கு அன்னைக்கு ஃபுல்லா மன கஷ்டத்திலும் ஓடிக்கொண்டே இருந்தோம். ஆனா பவதா இவ்வளவு சீக்கிரம் போயிட்டு வா அப்படினு நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் வெங்கட் பிரபு.