தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் நடத்திய போது கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு விஜய் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசல் வழக்கில் கரூர் நீதிமன்றத்தில் தவெக தரப்பினரில் வைக்கப்பட்ட வாதத்தில், எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று எங்களுக்குத் தான் அதிக வருத்தம். இதனால்தான் தவெக தலைவர் விஜய் வெளியே வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
