“எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்”… தனக்கு ஒரு தம்பி பிறப்பான் என முன்னரே கணித்த 7 வயது சிறுமி… இணையத்தை உலுக்கும் வீடியோ..!!!

By Rajeshwari on பங்குனி 13, 2026

Spread the love

ஒன்பது வயதில் புற்றுநோயால் உயிரிழந்த டெஸ்டினி என்ற சிறுமி, தனது மரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, தான் விளையாடிக்கொண்டிருந்த அலைபேசியில் ஒரு ரகசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். அப்போது ஏழு வயதாக இருந்த அந்தச் சிறுமி, தனக்கு ஒரு தம்பி பிறப்பான் என்பதை முன்னரே உணர்ந்தவள் போல, தனது வருங்கால உடன்பிறப்புகளுக்காக அந்தச் செய்தியைப் பதிவு செய்திருந்தார்.

மேலும் “எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள், மற்றவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்” என்று மழலை மாறாத குரலில் அவர் பேசிய அந்த வீடியோ, அவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் கழித்து, அவரது தாய் பழைய நினைவுகளைத் தேடியபோது தற்செயலாகக் கண்ணில் பட்டது. எதிர்பாராத நேரத்தில் கிடைத்த இந்த பொக்கிஷம், அந்தத் தாய்க்குப் பெரும் ஆறுதலையும் அதிர்ச்சியையும் ஒரே நேரத்தில் அளித்தது.

   

“>

   

இதனால் டெஸ்டினியின் இந்த இதயத்தைத் தொடும் செய்தி, அன்பிற்கு மரணமில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது. தான் நேரில் பார்க்க முடியாத தனது தம்பிக்கு, ஒரு வழிகாட்டியாக இருந்து அவர் விட்டுச் சென்ற இந்த அன்பு மொழி, தற்போது சமூக வலைதளங்களில் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

 

இந்நிலையில் டெஸ்டினியின் தம்பி வளர்ந்த பிறகு, தனது அக்கா தன்னிடம் நேரில் பேச முடியாவிட்டாலும், டிஜிட்டல் வடிவில் விட்டுச் சென்ற இந்த ஆசீர்வாதத்தைக் காணும்போது, அது அவனது வாழ்நாள் முழுவதும் ஒரு பெரும் சக்தியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.