Pan India படம் எடுக்கிறதுக்கு ஒரே காரணம் இதுதான்… நெல்சன் லோகேஷை மறைமுகமாக தாக்குகிறாரா மகிழ் திருமேனி…?

By admin on தை 29, 2025

Spread the love

மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மகிழ் திருமேனி. உதவி இயக்குனராக மட்டுமல்லாமல் சில கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதி வந்தார் மகிழ் திருமேனி.

   

2010 ஆம் ஆண்டு “முன்தினம் பார்த்தேனே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மகிழ் திருமேனி. அடுத்ததாக 2012 ஆம் ஆண்டு தடையற தாக்க என்ற திரைப்படத்தை இயக்கினார். 2014 ஆம் ஆண்டு ஆர்யாவை வைத்து மீகாமன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் 2019 ஆம் ஆண்டு தடம் 2021 ஆம் ஆண்டு கழகத் தலைவர் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமானார் மகிழ் திருமேனி.

   

தற்போது நடிகர் அஜித்குமாரை வைத்து மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. இப்படத்தின் ப்ரொமோஷனுக்கான நேர்காணலில் கலந்து கொண்டு வருகிறார் மகிழ் திருமேனி. அதில் Pan India திரைப்படங்களை பற்றி அவர் பேசியிருக்கிறார்.

 

மகிழ் திருமேனி கூறியது என்னவென்றால் Pan India படங்கள் எடுப்பதற்கு காரணமே பணத்துக்காக தான். முந்தைய காலத்தில் ஒரு மொழியில் படம் வெற்றி பெற்று விட்டால் அதை டப்பிங் செய்தோ அல்லது அதே பாணியில் எடுத்தோ வெளியிடுவார்கள். தற்போது Pan India படம் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் முக்கியமான நடிகர்களை எடுத்து போட்டு படம் இயக்கி வருமானம் பார்ப்பதற்காக தான் செய்கிறார்கள். அதை தவறு என்றும் கூறி விட முடியாது என்று கூறியிருக்கிறார். இதை கேட்ட நெட்டிசன்கள் லோகேஷ் மற்றும் நெல்சனை மறைமுகமாக இவர் தாக்குகிறாரா என்று பேசி வருகின்றனர்.