நான் திமுகவில் இணைந்ததற்கு காரணம் இது தான்… சத்யராஜின் மகள் திவ்யா விளக்கம்…

By admin on தை 19, 2025

Spread the love

சத்யராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல நடிகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். கோவையில் பிறந்து வளர்ந்த சத்யராஜ் கல்லூரி படிப்பை முடித்த பின்பு நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு குடி பெயர்ந்தார். ஆரம்பத்தில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி குறைந்த பட்ஜெட் படங்களில் நடித்து வந்து கொண்டிருந்தார் சத்யாராஜ்.

   

பின்னர் சத்யராஜ் அவர்களின் கல்லூரி கால நண்பர் மணிவண்ணன் சினிமாவிற்குள் நுழைந்தார். அவர் இயக்க ஆரம்பித்த பிறகு சத்யராஜை வைத்து கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெற்றி திரைப்படங்களை இயக்கினார். அதன் மூலம் புகழ்பெற்ற நடிகராக மாறினார் சத்யராஜ். மலபார் போலீஸ், சுயேச்சை எம்எல்ஏ, நூறாவது நாள், சின்ன தம்பி பெரிய தம்பி, அமைதிப்படை, நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற திரைப்படங்கள் இவர் நடித்ததில் பிரபலமானவை ஆகும்.

   

சத்யராஜ் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சிபிராஜ் மற்றும் திவ்யா. அதில் சிபிராஜ் தமிழ் சினிமாவில் நாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். திவ்யா ஒரு ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று சத்யராஜ் அவர்களின் மகள் திவ்யா திமுக கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறார். அவர் ஏன் திமுக கட்சியில் இணைந்து இருக்கிறார் என்ற காரணத்தை பற்றி அவர் கூறியிருக்கிறார்.

 

திவ்யா கூறியது என்னவென்றால் திமுக கட்சியில் ஊட்டச்சத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். நான் ஊட்டச்சத்து நிபுராக இருக்கிறேன். அவர்களின் காலை உணவு திட்டத்தை பார்த்து நான் மிகவும் Impress ஆனேன். அதேபோல் பெண்களுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மக்களுக்கு அதிகமாக சேவை செய்யும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் நான் திமுக கட்சியில் இணைந்தேன் என்று திவ்யா விளக்கம் அளித்திருக்கிறார்.