#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ஜோதிகா. இவர் சினிமாவின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களிருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டுள்ளனர். இவர்களது காதலுக்கு சூர்யாவின் அப்பாவான நடிகர் சிவகுமார் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் குடும்பத்தை மீறி தான் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.
#image_title
இதை தொடர்ந்து நடிகை ஜோதிகாவும் திரையுலகை விட்டு திருமணத்திற்கு பிறகு விலகியே இருந்தார். தொடர்ந்துபல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார் நடிகர் சூர்யா. இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை ஜோதிகா ’36 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாஸ் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்பொழுது அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி லாலுடன் இணைந்து ‘காதல் தி கோர்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .தற்பொழுது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் மும்பையில் புதிய வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர் என்றும், அதற்கு காரணம் மாமனாருக்கும், மருமகளுக்கும் இருக்கும் மனக்கசப்பு தான் என்றும் கூறப்பட்டது.
#image_title
இந்நிலையில் சமீபத்தில் விஜய் டிவியின் நீயா நானா புகழ் கோபிநாத் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார். இதில் ஜோதிகா ‘தனது மாமனார் சிவக்குமார் தான் தனக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருந்ததாகவும், அவருக்கும் தனக்கும் எப்போதுமே சண்டை ஏற்பட்டதே கிடையாது எனக்கூறி பரவும் வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
#image_title
மேலும் அவர் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாக காரணம் , தனது அம்மா மற்றும் அப்பாவை கவனித்து கொள்வதற்காகவும் மற்றும் குழந்தைகளின் படிப்பு மட்டும் தான் என்று கூறியிருந்தார். மேலும் கோபிநாத் அவரிடம் சென்னை, மும்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்க என கேட்க, ‘மும்பை எனக்கு அம்மா மாதிரி , ஏன்னா நான் பொறந்து வளந்தது எல்லாமே மும்பையில தான். சென்னை எனக்கு அப்பா மாதிரி. எனக்கு அடைக்கலம் கொடுத்து , என்னை பாதுகாப்பா பாத்துச்சு’ என்றும் கூறியுள்ளார்.
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…