சினிமால இது கிடைச்சாதான் முழு திருப்தி… கெத்து தினேஷ் ஓபன் டாக்…

By Meena on அக்டோபர் 16, 2024

Spread the love

கெத்து தினேஷ் என்று அழைக்கப்படும் தினேஷ் ரவி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். படிப்பை முடித்த தினேஷ் 2010 ஆம் ஆண்டு விஜய் டிவியின் காதலிக்க நேரமில்லை என்ற தொடரில் நடித்தார். அதற்கு அடுத்ததாக சன் டிவியில் ஒரு தொடரில் நடித்தார். இதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் மற்றும் மௌனகுரு ஆகிய திரைப்படங்களில் சிறுவேடங்களில் நடித்தார் தினேஷ். 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தினேஷ். அதிலிருந்து இவர் அட்டகத்தி தினேஷ் என்று அழைக்கப்பட்டார். தொடர்ந்து திருடன் போலீஸ், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, ஜே பேபிகிய படங்களில் நடித்து பிரபலமானார் தினேஷ். இருந்தாலும் இவருக்கு நல்லதொரு பெயர் சொல்லும் கதாபாத்திரம் கிடைப்பதற்காகவே காத்திருந்தார் தினேஷ்.

   

அதன்படி தற்போது இவரும் ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்த ப்பர் பந்து என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் கெத்து ஆகும். இந்த படத்தில் இவரது நடிப்புக்கு வெகுவாக அனைவரும் பாராட்டி இவரது அட்டகத்தி தினேஷ் என்ற பெயரை மாற்றி தற்போது கெத்து தினேஷ் என்று கூப்பிடும் அளவுக்கு இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அது சிறப்பான நடிப்பை திரைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார் தினேஷ்.

 

சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட தினேஷ் சினிமாவில் தனக்கு திருப்தி தருவது எது என்று பகிர்ந்திருக்கிறார். அது என்னவென்றால் நாம் சினிமாவில் நடிக்கிறோம் அதுக்கு நமக்கு பணம் தராங்க அது வேற விஷயம். இருந்தாலும் மக்களோட ஆரவாரங்களும் கைதட்டுகளுக்காகவும் கிடைக்காதான்னு நான் ரொம்ப ஏங்கி இருக்கேன். அது எனக்கு ப்பர் ந்து படம் மூலமா எனக்கு கிடைத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. மக்களோட ஆதரவு அவங்களோட கைதட்டல் பாராட்டு இதெல்லாம் தான் எனக்கு சினிமாவுல ஒரு முழு திருப்தியையே தரும் என்று ஓபனாக பேசியிருக்கிறார் கெத்து தினேஷ்.