தமிழ் சினிமா மறக்க முடியாத நடிகர் மோகன். கர்நாடக மாநிலத்தின் உடுப்பியை சேர்ந்தவர் மோகன். 1980களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மோகன். தமிழ் மட்டுமல்லாது மலையாளம் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் மட்டும் 80 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.
கன்னட திரைப்படம் ஆன கோகிலா என்ற படத்தின் மூலம் தான் திரையுலக பயணத்தை ஆரம்பித்தார் மோகன். இதனால் இவரை கோகிலா மோகன் என்றும் அழைத்தனர். அதற்குப் பிறகு 1980 ஆம் ஆண்டு மூடுபனி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து விதி, நூறாவது நாள், ரெட்டைவால் குருவி, சகாதேவன் மகாதேவன், மனைவி சொல்லே மந்திரம், நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் மோகன். இவரது படங்கள் பெரும்பாலானவை ஹிட் ஆவதால் இவரை வெள்ளிவிழா நாயகன் என்று மக்கள் அழைத்தனர்.
1986 ஆம் ஆண்டு மௌனராகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் மோகன். இந்த திரைப்படம் பட்டி தொட்டியும் எங்கும் பரவி புகழின் உச்சத்திற்கு சென்றார் மோகன். இந்த படத்தின் பாடல் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இன்றளவும் அனைவராலும் ரசிக்கப்படும் எவர்கிரீன் சாங்காக இருக்கிறது.
2000 களின் பிற்பகுதியில் சினிமாவை விட்டு விலகி இருந்த மோகன் தற்போது இந்த வருடம் ஹரா மற்றும் கோட் திரைப்படத்தில் நடித்து கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மோகன் தனக்கு மைக் மோகன் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைப்பற்றி பகிர்ந்து இருக்கிறார்.
அவர் கூறியது என்னவென்றால் மைக் மோகன்னு எனக்கு பேர் வெச்சது பத்திரிக்கையாளர்கள் தான். என்னுடைய படங்களில் தொடர்ந்து ஒரு நாலஞ்சு படங்களில் மைக் வெச்சுட்டு மேடையில் பாடுற மாதிரி ஒரு பாட்டு இருக்கும். பிறகு என்னுடைய படங்கள் பெரும்பாலான படங்களில் பாடல் எல்லாமே ஹிட் தான். அதற்கு காரணம் இளையராஜா சார் தான். அதனாலதான் எனக்கு மைக் மோகன்னு பெயர் வந்துச்சு என்று பகிர்ந்து இருக்கிறார் மோகன்.