பயங்கர சத்தம்..! “என்னை காப்பாத்துங்க”… கதறிய இளம்பெண்… 3 முறை துப்பாக்கிச் சூடு… முன்னாள் காதலரின் வெறிச்செயல்… 22 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

By Gayathri on ஐப்பசி 10, 2026

Spread the love

லம்பாரேயில் உள்ள சாண்டா லூசியா பகுதியில், தனது முன்னாள் காதலரின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளாகி டெய்ஸி பாவோலா கிமினெஸ் செகோவியா என்ற 22 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே தனது முன்னாள் காதலரால் தனக்கு ஆபத்து இருப்பதாக வன்முறை புகார் அளித்திருந்த நிலையில், இந்த அதிர்ச்சியூட்டும் கொலை அரங்கேறியுள்ளது.

வழக்கம்போல் அவர் வேலைக்குச் சென்று கொண்டிருந்த சமயத்தில், 26 வயதான ஆல்டோ அலெக்சிஸ் டுவார்டே வாகனத்தை குறுக்கே நிறுத்தி அவரது வழியை மறித்துள்ளார். பின்னர் வாகனத்திலிருந்து கீழே இறங்கி அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தாக்கியதுடன், அவரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.