விஜய் போட்ட அந்த ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவு…. அதிர்ச்சியில் தவெக நிர்வாகிகள்… மதுரையில் உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்….!

By Nanthini on ஆடி 18, 2026

Spread the love

தமிழகத்தில் ஊழலற்ற மற்றும் தூய்மையான ‘கிரீன் கவர்மெண்ட்’ (பசுமை அரசு) அமைப்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் முதன்மை நோக்கம் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தவெக என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான அரசு என்றும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவற்றை இந்த அரசு நிறைவேற்றும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், கட்சியின் ஒவ்வொரு கூட்டத்திலும் லஞ்சம், லாவண்யம் போன்ற தவறான செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என்றும், மக்களுக்கு எதிராக எவ்விதப் பணிகளையும் செய்யக் கூடாது என்றும் விஜய் தங்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.