போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த முதற்கட்ட மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அண்ணாமலை, அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக தென் கடலோர மாவட்டங்களில் பெரிய அளவிலான தூய்மைப் பணி திட்டத்தைக் கையில் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கான தொடக்க விழா வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி கன்னியாகுமரியில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பினர் தெரிவித்துள்ளபடி, கடற்கரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல், சுற்றுலா தலங்களின் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய மையங்களை முறையாகப் பராமரித்தல் ஆகியவையே இந்த முக்கியப் முயற்சியின் முதன்மை நோக்கங்களாகும்.
