காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர், மறைந்த தனது கணவர் தனக்கு கடைசியாக வழங்கிய அன்புப் பரிசை, போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டு மக்களின் துயரம் போக்க தானமாக வழங்கியுள்ள நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வருகின்றது. இதனால் ஈரானில் உள்ள பொதுமக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவு மற்றும் உதவி செய்யக்கூடிய வகையில் காஷ்மீர் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவி வழங்கி வருகின்றனர்.
அதன்படி ஒரு பெண் 28 ஆண்டுகளுக்கு முன் இறந்த தனது கணவர் அவர்களுக்கு தங்க நகை ஒன்றை பரிசளித்துள்ளார். அதனை நன்கொடையாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில், “உங்கள் கண்ணீரும் தூய்மையான உணர்ச்சிகளுமே எங்களுக்கு பெரிய ஆறுதல் ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம், போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானியர்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க விரும்பும் இந்தியர்களுக்காகமார்ச் 14ஆம் தேதி அன்று வங்கி விவரங்களை பகிர்ந்தது. மேலும் பல இந்தியர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகின்றனர்.
A respected sister from Kashmir, donated the gold kept as a memento of her husband who passed away 28 years ago with a heart full of love and solidarity for the people of #Iran.
Your tears and pure emotions are the greatest source of comfort for the people of Iran and will never… pic.twitter.com/0zFcJwGhj0— Iran in India (@Iran_in_India) March 22, 2026
