‘இந்த தைரியமே பொய் தான்’… ரக்ஷிதாவுக்கு சரியான பதிலடி கொடுத்த அசிம்… என்ன நடந்தது?… வைரல் ப்ரோமோ இதோ…

By Begam

Published on:

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. 5 சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.

   

இவர்களை பார்த்து போட்டியாளர்கள் மகிழ்ச்சி அடைந்த தருணம் இந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுது பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையே மீண்டும் சண்டை ஏற்பட தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று வெளியான முதல் பிரமோவில் மைனா நந்தினி விக்ரமனை குறித்து பேசினார்.

இதை தொடர்ந்து மைனா நந்தினிக்கும் விக்ரமனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய நாளில் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரக்ஷிதா அசிம் குறித்து பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து பேசிய அசிம் ‘வார கடைசியில் கமல் சார் முன்னாடி வரும் தைரியம் மற்ற நாட்களில் உங்களுக்கு ஏன் வருவதில்லை?’ உங்களுடைய தைரியமே பொய் தான்’ என்று கூறியுள்ளார். இவ்வாறு இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ….