நம்மில் பலருக்கும் பானி பூரி என்றால் இஷ்டம். அப்படி பானி பூரி மீது தீராத காதல் கொண்ட ஒரு பெண், அதை ஒரு பிஸினஸாக மாற்றியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா ?
ஆம், பி.டெக் படிக்கும் 21 வயதாகவும் டாப்ஸி என்ற பெண் பானி பூரி கடை ஒன்றை துவங்கி அதன் மூலம் நல்ல வருமானத்தை பெற்று வருகிறார். டெல்லியை சேர்ந்த டாப்ஸிக்கு ஏதாவது பிசினஸ் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. இதற்காக தன் பெற்றோரிடம் பேசி, முதலீடு செய்ய 30 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார், அவர் சேமித்த வைத்த பணத்தையும் போட்டு பி.டெக் பானிபூரி வாலி என்ற கடையை ஆரம்பித்தார்.
ஒரு பெண் பானிபூரி வருகிறாரே என ஆர்வத்தில் பார்க்க வந்த அனைவரும் இவரின் பானிபூரிக்கு அடிமையாகி விட்டனர். இது மற்ற பானிபூரி போல் அல்ல. மைதா இல்லாமல் கோதுமையால் பானிபூரி தயார் செய்கிறார். இவர் ஊற்றும் பானி ஜீரா, கொத்தமல்லி சேர்த்த கலவை. இப்படி ஆரோக்கியமான பானிபூரியை மக்களுக்கு கொடுப்பது தான் என் நோக்கம் என கூறுகிறார் இந்த டாப்ஸி.
வயதானவர்கள் கூட இவரின் கடைக்கு ரெகுலர் கஸ்டமர் ஆகிவிட்டனர். இந்த உற்சாகம் அவரை மேலும் இரண்டு இடங்களில் இந்த கடையை திறக்க உதவியுள்ளது. இதுவரை மூன்று இடங்களில் பானிபூரி விற்கும் இவரின் மாத வருமானம் 9 லட்சமாம். இனி பல இடங்களில் இந்தியா முழுக்க இந்த கடையை துவங்க உள்ளதாக தெரிவித்துள்ளார் டாப்ஸி. ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கும் பெண்களுக்கு டாப்ஸி ஒரு இன்ஸபிரேஷன் தான்.