திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்த புட்லூர் என்ற கிராமத்தில் சரவணன் என்பவரின் மகன் அரவிந்த் (29) வசித்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. அரவிந்த் மற்றும் ஜான்சி சம்பாதிக்கு நான்கு வயதில் சாரிகா என்ற ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அரவிந்த் மதுபான கடையில் லோடு ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்துள்ளார். இதனால் அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இப்படியான நிலையில் அரவிந்தனுக்கு பால்ராஜ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்ட நிலையில் பால்ராஜ் அரவிந்துக்கு உஷா என்ற ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அரவிந்தும் உஷாவும் நட்பாக பழகிய நிலையில் அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி உள்ளது. உஷா பணத்துக்காக ஆண்களிடம் பழகக் கூடியவர். எனவே அரவிந்தும் உஷாவும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே உஷாவிற்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் மாதவிடாய் காலங்களிலும் கூட தன்னுடன் தனிமையில் இருக்கச் சொல்லி அரபிந்து உஷாவை கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் என் சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத உஷா இது தொடர்பாக தனக்கு அறிமுகம் செய்து வைத்த பால்ராஜ் இடம் கூறியுள்ளார்.
பால்ராஜ் அரவிந்தை அழைத்து கண்டித்த நிலையில் அதனை பொருட்படுத்தாமல் அரவிந்த் தொடர்ந்து உஷாவை தனிமையில் இருக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உஷா மற்றும் பால்ராஜ் அரவிந்தை கொலை செய்ய திட்டம் தீட்டிய நிலையில் கடந்த ஜூன் 19ஆம் தேதி வேலையை முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு திரும்பி அரவிந்தை வழிமுறைத்து ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காத்திருந்த கூலிப்படையை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் அரவிந்தை சரமாரியாக வெட்டிவிட்டு உடலை தண்டவாளத்தில் வீசி விபத்து போல சித்தரித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதனிடையே அரவிந்தின் மனைவி ஜான்சி வேலைக்கு சென்ற தன் கணவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் உடலை பார்க்க ஜான்சி வந்த நிலையில் தன் கணவரின் உடல் தான் என்பதை அவர் உறுதி செய்தார். அரவிந்த் இறப்பை சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு வந்த பிரேத பரிசோதனை முடிவில் அரவிந்த் பெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்த நிலையில் அரவிந்தின் போன் கால் ஹிஸ்டரியை வைத்து உஷாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் முன்னுக்கு பின் பதிலளித்த உஷா பிறகு தானும் தன்னுடைய நண்பரும் சேர்ந்து அரவிந்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்த நிலையில் கூலிப்படையை சேர்ந்த இரண்டு சிறுவர்களையும் கைது செய்து தப்பி சென்ற பால்ராஜை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியுள்ளது
