Breaking: திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு.. மன்னிப்பு கேட்டார் மாவட்ட ஆட்சியர்…!!!

By Soundarya on மாசி 2, 2026

Spread the love

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யத் தவறிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அப்போது பேசிய ஆட்சியர், தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வின் போது அப்பகுதியில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்ததாகவும், அதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் நோக்கம் தமக்கு இல்லை என்று கூறிய அவர், இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், எனவே இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.