யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்… மீண்டும் திரைக்கு வரும் ‘திருப்பாச்சி’… வசூல் சாதனை நொறுங்குமா?… தளபதி ரசிகர்கள் வெயிட்டிங்…!

Spread the love

தமிழ் சினிமாவில் கிளாசிக் மற்றும் வெற்றிப் படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் கலாச்சாரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் ரீ-ரிலீஸான ‘கில்லி’ திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.26 முதல் ரூ.30 கோடி வரை வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. அந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஜய்யின் மற்றொரு சூப்பர் ஹிட் படமான ‘திருப்பாச்சி’ வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. இப்படத்தைத் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் மறுவெளியீடு செய்கிறது.

இயக்குநர் பேரரசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான ‘திருப்பாச்சி’, அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவான மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாகும். தன் தங்கை சென்னையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகச் சென்னையில் உள்ள ரௌடிகளை நாயகன் அழிக்கும் கதையைக் கொண்ட இத்திரைப்படம், வெளியான சமயத்தில் குடும்ப ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அசத்திய இத்திரைப்படம் அப்போது ரூ.32 கோடி வசூல் சாதனை செய்தது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும், தங்கையாக மல்லிகாவும் நடித்திருந்தனர். மேலும் பசுபதி, மனோஜ் கே. ஜெயன், கோட்டா சீனிவாச ராவ், பெஞ்சமின், லிவிங்ஸ்டன் எனப் பலர் நடித்திருந்தனர். விஜய்யின் மாஸ் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காமெடி மற்றும் தீனா, மணிசர்மா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் துள்ளலான பாடல்கள் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வழிவகுத்தன. தமிழில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இத்திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ‘அன்னவரம்’ என்ற பெயரிலும், கன்னடத்தில் ‘தங்கிகாகி’ என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

“அனாதை ஆசிரமத்துக்கு சொத்து”…. முதியவர் சொன்ன ஒற்றை வார்த்தை… அதிகாலையில் நடந்த கொடூரம்…. தாய், மகன் சேர்ந்து செய்த மன்னிக்க முடியாத காரியம்…!

சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம்…

2 minutes ago

BREAKING: எ.வ.வேலு விலகினார்…. சற்றுமுன் ஸ்டாலினுக்கு பேரதிர்ச்சி… கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்….!

சமீபத்திய அரசியல் நகர்வுகளின் பின்னணியில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனங்களுக்குப் பதில் அளிக்காமல் எ.வ.வேலு விலகி நிற்பது…

8 minutes ago

அன்பில் மகேஷ் போட்ட இரகசிய போன் கால்… வெளியே வந்து KN நேரு கொடுத்த பதிலடி…. தமிழக அரசியலில் திடீர் பரப்பரப்பு….!

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…

16 minutes ago

வீட்டில் சண்டை போட்டு காரை ஓட்டிய சிறுவன்…! சகோதரர்கள் மீது மோதி…. ரத்த வெள்ளத்தில் போராடிய உயிர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ வைரல்…!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…

22 minutes ago

“மருத்துவக் கனவோடு ரஷ்யா சென்ற இளைஞருக்கு நேர்ந்த கொடுமை”…. கதறித் துடிக்கும் பெற்றோர்… நெஞ்சை உலுக்கும் சோகம்….!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…

25 minutes ago

“கல்யாணம் பண்ணிக்கிறேன்”…. ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய ஆண் காவலர்… கதறிய பெண் போலீஸ்… சென்னையில் பரபரப்பு….!

சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…

35 minutes ago