விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் ( இதுவரை தாங்கள் எந்தக் கூட்டணியையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய தவெக ஆட்சியில் தங்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது, தாங்கள் ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்ததற்கு வழங்கப்பட்ட வெகுமதியே ஆகும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மேலும், எந்த நேரத்திலும் விசிக தவெக அமைச்சரவையில் இருந்து வெளியேறலாம் என்றும் திருமாவளவன் மிக வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். தவெக கூட்டணியில் விசிக இல்லை என்றும், அமைச்சரவையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேறுவோம் என்றும் அவர் கூறியுள்ள இந்த அதிரடிக் கருத்து, தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் தரப்பிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
