தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் சாமானிய மனிதனை திருமாவளவன் சென்ற கார் இடித்து தள்ளியதைப் பற்றி கேட்டால் மிரட்டுவதா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் திருமாவளவன் பயணித்த போது எதிரே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிடப்பியுள்ள நிலையில் பலரும் திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே திருமாவளவனை அண்ணாமலை விமர்சித்துள்ளார். சாமானிய மனிதனை இடித்து தள்ளிவிட்டு அது பற்றி கேட்டால் மிரட்டுகிறார்கள். இதுபோன்ற வெறுப்பு அரசியல், மிரட்டுவதை விட்டுவிட்டு நாகரிகமான அரசியலுக்கு திருமாவளவன் முன் வரவேண்டும். வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம். போலீசாக பல ரவுடிகளை டீல் செய்த தன்னிடம் இந்த வேலையெல்லாம் பலிக்காது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
