அதிமுக வென்றாலும் EPS முதலமைச்சராக நீடிக்க முடியுமா..? உஷாரா இருங்க பாஸ்.. திருமா போட்ட பெரிய வெடிகுண்டு…!!

By Soundarya on பங்குனி 7, 2026

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக இடையிலான உறவு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஒருவேளை வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றாலும், அவரால் அந்தப் பதவியில் நீடிக்க முடியுமா என்பதில் பெரும் சந்தேகம் இருப்பதாக அவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இதற்கு உதாரணமாக பீகார் மாநில அரசியலைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், அங்கு முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாஜக இழைத்த “நம்பிக்கை துரோகத்தை” நினைவூட்டியுள்ளார். கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே நிதிஷ்குமாரின் அதிகாரத்தை பாஜக எவ்வாறு சிதைத்தது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அதே போன்ற ஒரு நிலை தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படாது என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று எச்சரித்துள்ளார்.

   

எனவே, பாஜகவின் அரசியல் வியூகங்கள் மற்றும் அவர்களின் அதிகாரப் போக்கு குறித்து ‘அண்ணன் இபிஎஸ்’ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் பாஜக காலூன்ற முயலும் சூழலில், அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளின் தலைமைக்கு இதுபோன்ற ஆபத்துகள் காத்திருப்பதாகத் தெரிவித்த திருமாவளவனின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.