BREAKING: விஜய் உடன் திமுக டீலிங்கா?…. திருமாவளவன் ஆவேசம்… செம ஷாக்கில் ஸ்டாலின்…!

By Nanthini on ஐப்பசி 2, 2025

Spread the love

கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. அதேசமயம் விஜய்க்கு எதிராக பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து நேற்று முன்தினம் விஜய் வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் என் மீது ஏதாவது கோபம் இருந்தால் என்னை பழிவாங்குங்கள் நான் அலுவலகம் அல்லது வீட்டில் தான் இருப்பேன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் என் மீது கை வையுங்கள் என விஜய் சவால் விடுத்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்ய அரசும் காவல்துறையும் அச்சப்படுகிறதா அல்லது திமுக அரசுக்கும் விஜய்க்கும் மறைமுக டீலிங் உள்ளதா என கேள்வி எழுகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யாதது குறித்த காரணத்தை காவல்துறை சொல்ல வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் இவ்வாறு பேசியுள்ளது புதிய புயலை கிளப்பி உள்ளது.