தமிழக அரசியல் களத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மிகுந்த கவலையில் இருப்பதாக விசிக நிர்வாகிகளே பேசத் தொடங்கியுள்ளனர். விசிகவின் வாக்கு வங்கி மற்றும் அடிமட்ட நிர்வாகிகள், புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கித் தடம் மாறுவதுதான் இந்த விரக்திக்கும் கவலைக்கும் மிக முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
நடந்து முடிந்த தேர்தலில், தவெகவின் வெற்றிக்கு விசிகவில் உள்ள பட்டியலின இளைஞர்களின் வாக்குகள் கணிசமாகப் பங்களித்துள்ளன. விசிக இளைஞரணியைச் சேர்ந்த சுமார் 90 சதவீதத்தினர் நடிகர் விஜய்யின் ரசிகர்களாக இருப்பதால், கட்சித் தலைமையின் உத்தரவுகளையும் மீறி அவர்கள் தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். “விசிகவின் வாக்குகள் விசிகவுக்கே விழவில்லை, கூட்டணிக் கட்சிகளுக்கும் விழவில்லை” என்று தேர்தல் முடிவுகளுக்குப் பின் திருமாவளவன் கவலையோடு பேசியதும், விசிகவில் அண்ணன் திருமாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்று தவெக தரப்பில் ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததும் இந்த வாக்கு மாற்றத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
தேர்தலுக்குப் பிறகு தவெகவுக்குப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், தங்களை ஆதரிக்குமாறு விசிகவிடம் ஆதவ் அர்ஜுனா பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சிந்தனைச் செல்வன், ரவிக்குமார், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களுடன் திருமா ஆலோசித்தபோது, வன்னியரசு தவிர மற்றவர்கள் தவெகவின் ஆஃபரை எதிர்த்தனர். தவெகவுக்கு எதிராக வாக்களித்த மக்களின் மனநிலைக்கு மாறாக விஜய்யை ஆதரிப்பது ஆரோக்கியமற்றது என அவர்கள் வாதிட்டனர். எனினும், வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று கட்சியை வலிமைப்படுத்தவும் தவெகவுக்கான ஆதரவு நிலை இறுதியாக எடுக்கப்பட்டது.
ஆனாலும், கடந்த ஒரு மாத காலமாக அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து தவெகவில் இணையும் வைபவம் தீவிரமடைந்துள்ள சூழலில், விசிகவின் நிர்வாகிகளும் தவெகவுக்குத் தாவும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து அண்மையில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த திருமாவளவன், தவெக அமைச்சர்களின் அணுகுமுறை மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி கேட்டறிந்தார். அப்போது விசிகவினர் தவெகவுக்கு மாறுவது கட்சியின் பலத்தை பலவீனமாக்கும் என்பதால், “கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது எங்கள் கட்சியிலிருந்து வருபவர்களை தவெகவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம்” என ஆதவ் அர்ஜுனாவிடம் திருமாவளவன் நேரடியாகவே தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளதாக விசிக தரப்பில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…