கரூரில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த சம்பவம் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு பெரிய அவமரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 10 நாள்களாகியும் களத்திற்கு செல்லாததால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் விஜய்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “விஜய் மீது எங்களுக்கு எந்தவொரு வன்மமும் இல்லை. அவரை கைது செய்ய வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தவில்லை. நடந்த சம்பவத்திற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுதான் நாங்கள் விமர்சனம் செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் பாஜகவும், அதன் கூட்டணி கட்சிகளுமே அரசியல் செய்கின்றன” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
