விஜய் Vs திருமாவளவன்… பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் வெடித்த மோதல்…. கொந்தளிக்கும் விசிக…!

Spread the love

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் அரங்கேறிய நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. விழாவின் தொடக்கத்தில் மரபுப்படி பாடப்பட வேண்டிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ புறக்கணிக்கப்பட்டு, ‘வந்தே மாதரம்’ பாடல் இருமுறை ஒலிக்கப்பட்டதற்குக் கூட்டணிக் கட்சியான விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதல்வரின் கடமை என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளியது போன்றே, தமிழகத்தின் உரிமைகளையும் தள்ளிவிட வேண்டாம் என்று ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாகப் பேசிய திருமாவளவன், “நாங்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவே விஜய்க்கு ஆதரவு அளித்தோம்; அதற்காகத் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டோம் என்று அர்த்தமல்ல” எனத் தெளிவுபடுத்தியுள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிர்வாக ரீதியாகவும் விஜய்யின் கருத்துக்குத் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். பதவியேற்றவுடன் “முந்தைய அரசு கஜானாவைக் காலி செய்துவிட்டது” என்று விஜய் பேசியதைச் சுட்டிக்காட்டிய திருமாவளவன், இது போன்ற பேச்சுகள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உண்டாக்கும் என்று கூறியுள்ளார். “கஜானா காலி” என்று கூறிக்கொண்டிருக்காமல், தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான திட்டங்களில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விசிக எம்.எல்.ஏ வன்னி அரசு இது குறித்துக் கூறுகையில், இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக சிந்தனைகளைத் தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஸ்டாலின் போன்ற தலைவர்கள் இருந்திருந்தால் இதுபோன்ற மரபு மீறல்களை அனுமதித்திருக்க மாட்டார்கள் என்றும், தமிழகத்தின் தனித்துவமான பண்பாட்டையும் மரபுகளையும் காக்க வேண்டிய பொறுப்பு விஜய்க்கு இருப்பதாகவும் அவர் நினைவுபடுத்தினார். தவெக அரசு தனது முதல் நாளிலேயே கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பது அரசியல் களத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஒரு கை ஸ்டீயரிங், மறு கை பட்டாசு”…. உயிரோடு விளையாடும் விபரீத இளைஞர்கள்…. துவாரகா விரைவுச்சாலை ஸ்டண்ட் வைரல் வீடியோ….!

துவாரகா விரைவுச்சாலையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் காரில் சென்றவாறே 'ஸ்கை ஷாட்' பட்டாசுகளைக் கொளுத்தி ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த…

5 minutes ago

“பூமி உருண்டைல அப்படி ஒரு இடமே இல்லையாம்”…. ரூ.300 கோடி நூலகத்தில் நடந்தேறிய அதிர்ச்சி மோசடி…. உங்களுக்கு வெட்கமாகவே இல்லையா?…. விளாசிய அமைச்சர் ராஜ்மோகன்….!

கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்…

9 minutes ago

கட்டுப்பாட்டை இழந்த அசுர வேகம்… நடுரோட்டில் பாய்ந்த தார்… நொடியில் உருக்குலைந்த தீபாவளி அலங்காரம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் விபத்து…!!

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…

12 minutes ago

ரூ.30 கோடி பேரம்… அதிரடியாகத் தூக்கப்பட்ட அதிமுக பிரமுகர்….. “முஸ்தபா ஒன்றும் அரிச்சந்திரனும் இல்லை”…. எடப்பாடி & செல்லூர் ராஜூவின் அதிரடி தாக்குதல்….!

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…

15 minutes ago

“அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… அதிரடியாக இடிந்து விழுந்த ஆட்சியர் அலுவலகச் சிலாப்”…. அமைச்சர் கிளம்பிய சில நிமிடங்களில்… இடிந்து விழுந்த சிலாப்…!

வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…

20 minutes ago

போதையில் அட்டகாசம்… மோதிட்டேன்.. என்னடா பண்ணுவ?… நடுரோட்டில் டிரைவர் மோதல்… அப்பாவி மக்களுடன் கூச்சல் போட்ட பயங்கரம்…!!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…

21 minutes ago