இந்தியாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலங்களில் மிக முக்கியமானது திருப்பதி ஏழுமலையான் கோவில், இந்திய ஜனாதிபதி பிரதமர் முதல் வெளிநாட்டு அதிபர்கள் உலக கோடீஸ்வரர்கள் வரை தரிசனம் செய்யும் புகழ்பெற்ற தலமாக திருப்பதி கோவில் விளங்குகிறது. இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. இங்கு கோவில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை பீகார் மாநில அரசு ஒதுக்கி தந்துள்ளது.
99 ஆண்டுகளுக்கு வெறும் 1 ரூபாய் என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை தேவஸ்தானத்துக்கு வழங்க பீகார அரசு முன்வந்துள்ளது. எனவே இனி ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்வதை போலவே பீகார் மாநிலம் பாட்னாவில் ஏழுமலையான் கோவிலை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்க உள்ளது. இனி வட மாநில மக்களும் திருப்பதி ஏழுமலையானை பீகாரில் உள்ள பாட்னாவிலேயே தரிசனம் செய்யும் வாய்ப்பை திருப்பதி தேவஸ்தானம் உருவாக்க உள்ளது.
