தமிழக அரசியலில் இதுவரை எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல அரசியல் திருப்பங்கள் தற்போது நிஜமாகி வருகின்றன. பல தசாப்தங்களாக தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரு பெரும் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் நில்லாமல், தேர்தலுக்கு முன்பு தான் அளித்த வாக்குறுதியின்படி, தங்களுக்கு ஆதரவளித்த திமுக கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சிகளுக்கு ஆட்சியில் சம பங்களிப்பை வழங்கி, தவெக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் புதிய அரசியல் வரலாற்றைப் படைத்துள்ளார்.
இந்த அரசியல் மாற்றத்தின் மூலம், பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சிக்கு பிறகு சுமார் 50 ஆண்டுகாலமாக தமிழக அதிகார மையத்தில் கால்பதிக்க முடியாமல் தவித்து வந்த காங்கிரஸ் கட்சி, விஜய்யின் பெருந்தன்மையால் தற்போது தவெக அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. இதேபோல், கடந்த காலங்களில் திராவிட கட்சிகளிடம் ஒரு சில தொகுதிகளுக்காகக் கெஞ்சி நின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயுஎம்எல்) ஆகிய கட்சிகளும் தவெகவின் அழைப்பை ஏற்று புதிய அமைச்சரவையில் அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளன.
முன்னதாக, தவெக அமைச்சரவையில் இணைவது குறித்து விசிகவின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் விவாதப் பொருளாகவும், மதில்மேல் பூனையாகவும் இருந்து வந்தது. “விஜய் ஒரு ஆர்எஸ்எஸ் பிள்ளை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம், எனவே தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறாது” என்று ஆரம்பத்தில் ஆணித்தரமாகக் கூறிவந்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், தற்போது அப்படியே முற்றிலும் தலைகீழாக ‘யூ-டர்ன்’ அடித்து விஜய் அமைச்சரவையில் தங்களது கட்சி ஐக்கியமாகப் போவதாக இன்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தங்களின் இந்த திடீர் அரசியல் நிலைப்பாட்டு மாற்றம் குறித்து விளக்கிய திருமாவளவன், தவெக தரப்பில் இருந்து அமைச்சரவையில் பங்கேற்கும்படி தங்களுக்குத் தொடர்ச்சியான அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பேரிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தி இந்த இறுதி முடிவை எடுத்ததாகக் கூறியுள்ள அவர், விசிக சார்பில் வன்னி அரசு அமைச்சரவையில் இடம்பெறுவார் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார். விசிகவின் இந்த அதிரடி முடிவின் மூலம், அக்கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது தற்போது முற்றிலும் உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…