அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் பெற்ற வெற்றியால் விசிகவிற்கு அங்கீகாரம் கிடைத்ததை நினைவுகூர்ந்த அவர், அதிமுக-பாஜக கூட்டணி வலுப்பெற்றால் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தார். இக்கூட்டணி வெற்றி பெற்றால் வடமாநிலங்களைப் போல வழிபாட்டுத் தலங்கள் இடிப்பு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை காவிரி டெல்டா மண்டலத்திலிருந்து நீக்கியது அதிமுக அரசு என்றும், விசிக உள்ளிட்ட கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியில் இப்பகுதி மீண்டும் டெல்டாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகத் திருமாவளவன் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக எம்பி துரை வைகோ, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார்.

   

மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்பதாகக் குறிப்பிட்ட துரை வைகோ, அதே வேளையில் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தென்மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். குறிப்பாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு உரிய நிதி மற்றும் திட்டங்களை வழங்காமல் ஒன்றிய அரசு புறக்கணிப்பதாகவும் அவர் தனது பேட்டியில் சாடினார்.