அதிர்ச்சி திருப்பம்…. திமுக – பாஜக திடீர் கூட்டணி?…. பின்னணியில் திருமாவின் ‘ஸ்கெட்ச்’…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 20, 2026

Spread the love

திமுக பாஜகவை நெருங்குவதற்கு மாறிவரும் அரசியல் சமன்பாடுகளே காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சுற்றியிருந்த கூட்டணி தொடர்பான குழப்பங்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் உறுதிப்பாட்டால் ஒரு தெளிவை எட்டியுள்ள சூழலில், பாமக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுதியாகப் பயணிக்கும் என்பது தெளிவாகிறது.

மேலும், தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளும் பாஜகவின் பக்கம் நகரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், பாஜகவுடனான இணக்கம் குறித்து திமுக பரிசீலித்து வருவதாகவும், தேர்தலை முதலமைச்சர் வேட்பாளர் முகமின்றி தனித்து எதிர்கொண்டால் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்ற அச்சமே இதற்கு முதன்மை காரணம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.