விஜய் மீது வழக்கு பதியாவிட்டால்… என்.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் வாங்குங்க… கொந்தளித்த தொல்.திருமாவளவன்..!!

By Soundarya on ஐப்பசி 2, 2025

Spread the love

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொல்.திருமாவளவன், “கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாமல் காவல்துறை மெத்தனமாக நடந்து கொள்கிறது. விஜய், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு போட முகாந்திரம் இல்லை என்றால், ஆனந்த் மீதான வழக்கில் எப்படி முகாந்திரம் இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விஜய் மீது வழக்குப் பதியாவிட்டால், என்.ஆனந்த் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறிய அவர், கரூர் துயரத்திற்கு விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மேலும் விஜய்யை பாஜக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்   தனியாக நிற்கவைத்து வாக்குகளை பிரிப்பதே அவர்களது நோக்கம். ஆபத்தான அரசியலை கையில் எடுத்துள்ளார் விஜய்  என்று கடுமையாக சாடியுள்ளார்.