உத்திரபிரதேச மாநிலத்தில் 30 வயது பெண் தற்கொலை செய்யப் போகிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். நேற்று காலை 8 மணி அளவில் பதிவிட்டிருந்த இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவியது. அந்த வீடியோவை கண்டு அதிர்ந்து போன காவல்துறையினர். என் இருபது நிமிடத்தில் அதாவது 8:20 க்கு பெண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டனர். மொபைல் போனின் ஐபி முகவரியை வைத்து கண்டுபிடித்துள்ளனர். செக்டார் இருபதில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தான் என்று தெரிய வந்தது. விரைந்து சென்ற போலீசார் பெண்ணை தடுத்து நிறுத்தி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபத்தான நிலையை கடந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
அந்தப் பெண் தான் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும் என்னுடைய வாழ்வை முடித்து கொள்ளப் போகிறேன் என்றும் வீடியோ பதிவிட்டிருந்தார். வாசகர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் திறப்பில் கூறியுள்ளனர்.இந்த விவகாரத்தை பற்றி பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் இப்பெண்ணிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருப்பினும் சில மாதங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய மன உளைச்சலுக்கு இது கூட காரணமாக இருக்கலாம். எந்த ஒரு காரணத்துக்காகவும் தற்கொலை என்பது முடிவல்ல என்று அந்த போலீசார் கூறியிருந்தால்.
