Google Pay, PhonePe யூஸ் பண்றீங்களா…? இதை கவனிக்கலனா உங்க பேங்க் பேலன்ஸ் ‘ஜீரோ’ ஆகிடும்… மக்களே உஷார்…!!

By Devi Ramu on தை 6, 2026

Spread the love

கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகள் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கினாலும், சிறு கவனக்குறைவு உங்கள் வங்கிச் சேமிப்பை அபகரிக்கக்கூடும். உங்கள் ரகசிய எண்ணான UPI PIN மற்றும் செல்போனுக்கு வரும் ஓடிபி ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் அந்நியர்களிடம் பகிரக்கூடாது.

மேலும், கவர்ச்சிகரமான பரிசுகள் அல்லது பணம் தருவதாகக் கூறி வரும் சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளை கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும். வங்கி தொடர்பான உதவி தேவைப்பட்டால், கூகுளில் எண்களைத் தேடாமல் அதிகாரப்பூர்வ செயலியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை மட்டுமே தொடர்பு கொள்வது பாதுகாப்பானது.

   

பணம் செலுத்தும் முன் க்யூஆர் (QR) கோடில் உள்ள பெயரின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதுடன், தேவையற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்யாமல் தவிர்ப்பது நல்லது. உங்கள் அலைபேசி மற்றும் வங்கிச் செயலிகளுக்கு கைரேகை அல்லது முக அங்கீகாரப் பூட்டுகளை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பைத் தரும்.

   

தினசரி பணப் பரிவர்த்தனைக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயிப்பதன் மூலம் ஹேக்கிங் போன்ற ஆபத்துகளில் இருந்து பெரிய இழப்புகளைத் தடுக்கலாம். உங்கள் கணக்கில் நடக்கும் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் குளறுபடி தெரிந்தால் உடனே வங்கிக்குத் தெரிவிப்பது உங்கள் பணத்திற்கு கேரண்டி அளிக்கும்.