“எதிர்க்கட்சி கூட்டமா…? அப்போ இப்படித்தான் செய்வீங்களா…?” 3.கி.மீ தூரம் சுற்றி… தமிழக போலீஸாரை விளாசிய திலகபாமா…!!

By Devi Ramu on தை 23, 2026

Spread the love

மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பாமக பொருளாளர் திலகபாமா காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஐபி (VIP) நுழைவுச் சீட்டு இருந்தபோதிலும், அவரை அந்தப் பாதையில் அனுமதிக்காமல் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் சுற்றி வருமாறு போலீஸார் அலைக்கழித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக காவல்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு வேண்டுமென்றே இதுபோன்ற இடையூறுகளைச் செய்வதாக அவர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதேபோன்ற கசப்பான அனுபவம் இதற்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளர் வெங்கட்ராமனுக்கும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்கட்சியின் மாநாடு மற்றும் கூட்டங்களின்போது அவரிடம் முறையான அனுமதி இருந்தும், போலீஸார் அவரை விஐபி பாதையில் அனுமதிக்காமல் தடுத்தனர். அரசியல் கட்சிகளின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கே பாதுகாப்பு என்ற பெயரில் இதுபோன்ற சோதனைகள் தொடர்வது நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடையில் ஏறிய நிலையில், பொருளாளர் திலகபாமாவுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் விவாதமாகியுள்ளது.