செல்வராகவன் முதல்ல கதை சொன்னது பிரசாந்துக்கு தான்.. மத்தவங்க நினைக்கிற மாதிரி இல்ல.. ஓப்பனாக பேசிய தியாகராஜன்..!!

By admin on புரட்டாதி 9, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த் அஜித் விஜய்க்கு நிகராக அந்த காலத்தில் பிரசாந்த் ரசிகர்கள் கொண்டாடினர். கடைசியாக பிரசாந்த் நடிப்பில் ரிலீசான அந்தகன் திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. விஜயின் கோட் திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.

   

பிரசாந்த் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் எப்போதும் தனது மகனுக்கு உறுதுணையாக இருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, பிரசாந்துக்கு நான்தான் கதை கேட்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. கோட் படத்திற்கு பிரசாந்த் தான் கதை கேட்டார். பிடித்திருக்கிறது என்று சொன்னார்.

   

தம்பியை வைத்து கைவித்தையை காட்டிய செல்வராகவன்.. சைக்கோவாக மாறிய தனுஷ்.. -  விடுப்பு.கொம்

 

சரி அப்போ நடி என நான் சொன்னேன். செல்வராகவன் முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தின் கதையை முதலில் பிரசாந்திடம்தான் செல்வராகவன் கூறினார். கதை பிரசாந்துக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் அந்த கதையில் ஒரு ஸ்கூல் பையன் மாதிரி நடித்தால் நன்றாக இருக்கும். எனக்கு அந்த ரோல் செட் ஆகாது எனக்கூறி பிரசாந்த் நடிக்க மறுத்துவிட்டார்.

அதே மாதிரி தான் பார்த்தேன் ரசித்தேன் படத்தில் நடித்தார். ஜீன்ஸ் மாதிரி ஒரு படம் வந்த பிறகு எந்த நடிகராவது புது டைரக்டர் படத்துல நடிப்பாரா? கண்ணெதிரே தோன்றினாள் அப்படின்னு ஒரு படம். ரவிச்சந்திரன் இயக்கினார். அது பண்றதுக்கு நடிகருக்கு துணிச்சல் வேண்டும் என தியாகராஜன் கூறியுள்ளார்.