காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… ஒரே நாளில் 100 நிர்வாகிகள் அவுட்… மொத்தமாக தவெகவில் இணைந்தனர்…!

By Nanthini on வைகாசி 14, 2026

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் குழப்பமான சூழலைப் பயன்படுத்தி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மாற்று முகாம்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையிலேயே நீலகிரி மாவட்டத் துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவருடன் உதகை மற்றும் குன்னூர் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அசுர வளர்ச்சி கொங்கு மண்டலத்தில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் நாட்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த மேலும் பல முக்கியப் புள்ளிகள் தவெகவில் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழக அரசியலில் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.