மனிதாபிமானம் செத்துப்போச்சா?.. நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லாரி.. உயிருக்கு போராடும் மனிதர்கள்.. ஓடி வந்த மக்கள்.. உதவிக்கு வரல… ஆனா திருட வந்துட்டாங்க.. நெட்டிசன்களை ஆத்திரமூட்டிய வைரல் வீடியோ..!!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள அந்தவா சந்திப்பு அருகே, ஞாயிற்றுக்கிழமை மதியம் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கான்பூரிலிருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த லாரி விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், லாரியில் இருந்த 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன; பல ஆடுகள் காயமடைந்து சாலை முழுவதும் சிதறி ஓடின.

இந்த விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே அந்த இடத்தில் பெரும் மனிதாபிமானமற்ற அவலம் அரங்கேறியது. விபத்தில் காயமடைந்து உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த மனிதர்களுக்கு முதலுதவி செய்யவோ அல்லது அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கவோ அங்கிருந்த வழிப்போக்கர்கள் முன்வரவில்லை. அதற்கு மாறாக, சாலையில் சிதறிக் கிடந்த மற்றும் லாரியில் சிக்கியிருந்த ஆடுகளைத் திருடிச் செல்வதில் அவர்கள் குறியாக இருந்தனர். காயமடைந்தவர்கள் உதவிக்காகக் காத்துக் கிடக்க, மக்கள் ஆடுகளைத் தூக்கிக்கொண்டு ஓடும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோக்ராஜ் மற்றும் ஷாஜாத்பூர் போலீசார், காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கிரேன் மூலம் லாரி அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டதுடன், எஞ்சிய விலங்குகளும் மீட்கப்பட்டன. இதுகுறித்து பேசிய காவல் அதிகாரி சந்திரபூஷன் மௌரியா, விபத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆடுகளைக் கொள்ளையடித்த நபர்களை அடையாளம் காண வைரல் வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Muthu Mani

Recent Posts

“ஆமா, அதிருப்தியிலதான் இருக்கேன்!”… விஜய் கட்சிக்கு அடுத்த தலைவலி?… தவெக-வை அதிரவைத்த நாஞ்சில் சம்பத்… பேட்டியில் கொட்டிய ஆதங்கம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வரும் பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சமீபத்தில் தனது சமூக வலைத்தளப்…

3 minutes ago

“Love You All”… போர்ச்சுக்கல் ரேஸுக்கு முன்பாக அஜித் வெளியிட்ட வீடியோ… குஷியான ரசிகர்கள்…. தீயாய் பரவும் காட்சிகள்….!

நடிகரும் பிரபல தொழில்முறை கார் பந்தய வீரருமான அஜித்குமார், தனது அடுத்தகட்ட கார் ரேஸ் போட்டி குறித்து வெளியிட்டுள்ள புதிய…

3 minutes ago

விஜய் பாணியில் தனுஷின் அடுத்த மூவ்…. அரசியல் களத்தில் இறங்கும் புதிய கட்சி… தேர்தல் ஆணையத்தில் ரகசியமாகப் பதிவான பெயர்?…. அதிர்ச்சியில் கோலிவுட்….!

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பேற்று வந்துள்ளன.…

10 minutes ago

“எல்லாம் முடிஞ்சது”… கள்ளக்காதலனுக்கு வந்த சீக்ரெட் மெசேஜ்… மாஸ்டர் பிளான் போட்டு கணவனை முடித்த மனைவி… காட்டிக்கொடுத்த வாட்ஸ்அப் சாட்டிங்…!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தனது கணவனை கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. கணவனைத் தீர்த்துக்கட்டிய பிறகு, அவர் திடீர்…

13 minutes ago

27 பெண்களுடன் உல்லாசம்… மனைவியை நண்பர்களுக்கு நிர்வாணமாக காட்டி பகீர் லீலை…. சீர்காழி ஐடிஐ ஆசாமியின் கொடூரம்…. பதறவைக்கும் சம்பவம்….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருமணமான 15 நாட்களிலேயே கணவனின் கொடூர லீலைகள் அம்பலமானதால் அதிர்ச்சியடைந்த பட்டதாரி பெண் ஒருவர்,…

16 minutes ago

“அண்ணா விட்டுடுங்க”.. கெஞ்சிய பெண்… நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் செய்த வெறிச்செயல்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… வசமாக சிக்கிய கொடூர கும்பல்…!!

தமிழ்நாட்டில், தன்னை நம்பிக் காதலித்த இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த…

20 minutes ago